2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சியின் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
‘சமாஜ்வாதி அத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த வாசனை திரவியத்தின் பெட்டியில் அகிலேஷ் யாதவ் படத்துடன் கட்சியின் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் எம்எல்சி பம்மி ஜெயின் தயாரித்த, இந்த வாசனை திரவியம் 22 இயற்கை வாசனைகளால் ஆனது. இது மற்ற வாசனை திரவியங்களை விட நீண்ட நேரம் நீடிக்கும் என்று கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், "இதனை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் சோசலிச வாசனை வீசுவார்கள். இந்த வாசனை திரவியம் 2022 இல் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவரும், இந்த வாசனை தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும்” என தெரிவித்தார். இந்த செய்தி ட்விட்டரில் வைரலாகி வருகிறது, இந்த வாசனை திரவியத்தை நெட்டிசன்கள் வேகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.