தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற இரு மகன்களும், ஈஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. ஆகாஷ் தற்போது ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழுவில் உள்ளார். அவர் தனது பள்ளிப்பருவ தோழி ஷ்லோகா மேத்தாவை ஆகாஷ் அம்பானி கரம் பிடிக்க உள்ளார்.
தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், முன்னதாக அம்பானி மற்றும் மேத்தா குடும்பத்தினர் கோவாவில் உள்ள ரிசார்ட்டில் சந்தித்து பேசினர். ஷ்லோகா பிரபல வைர தொழிலதிபர் ரஸ்ஸல் மேத்தாவின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் பிரபலமான ஓபராய் ஓட்டலில் டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை திருவிழா போல, திருமண நிகழ்வுகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகம் முழுவதும் இருந்து பிரபலமான தொழில் அதிபர்களும், இந்திய பிரபலங்கள் அனைவரும் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.