’விமானம் கடத்தல்’: அதிர வைத்த விமானி சஸ்பெண்ட்!

’விமானம் கடத்தல்’: அதிர வைத்த விமானி சஸ்பெண்ட்!
’விமானம் கடத்தல்’: அதிர வைத்த விமானி சஸ்பெண்ட்!
Published on

விமானம் கடத்தப்பட்டுவிட்டது என்று தவறுதலாக தகவல் அனுப்பி அதிகாரிகளை பதற வைத்த விமானி 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கடந்த மாதம் 8 ஆம் தேதி டெல்லியிலிருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது என்ஜினில் சிறிய பழுது ஏற்பட்ட நிலையில் அதை தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவிக்க விமானி முற்பட்டார். அப்போது  அவர், 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தியிருக்க வேண்டும். ஆனால், விமானம் கடத்தப்பட்டு விட்டது என்பதைக் குறிக்கும் 7500 என்ற சமிக்ஞையை தவறுதலாக அழுத்திவிட்டார். 

காஷ்மீருக்கு சென்ற விமானம் கடத்தப்பட்டது என்ற தகவலால் அதிர்ந்துபோன விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பாகினர். இதன் பின் விமானம் கடத்தப்படவில்லை என தெரிந்து நிம்மதி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, அந்த விமானத்தை இயக்கிய விமானி, ரவி ராஜூக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தனது தவறு குறித்து அவர் விளக்கம் அளித்தார். 

இதில் திருப்தியடையாத மத்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், அந்த விமானியை 3 மாதத்துக்கு இடை நீக்கம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com