அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் இயக்கப் பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல இன்று காலை செல்ல இருந்தது. அதற்காக விமான நிலையத்தில் நிறுத் தப்பட்டிருந்த விமானத்தில் பொறியாளர்கள் வழக்கமான சோதனையில் நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமா னத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து உடனடியாக, தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப் பட்டு தீ அணைக்கப்பட்டது. விமானத்தில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வழக்கமான சோதனையில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். ஏசி பழுது பார்த்த போது, மின் கசிவு ஏற்பட்டதால், விமானத்தின் பின்பகுதியில் தீப்பொறி ஏற்பட்டதைக் கண்டனர். உடனடியாக அது அணைக்கப்பட்டு விட்டது. இதனால் விமானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. முழு விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.