இன்ஜினில் தீ: உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்

பெங்களூருவில் இருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பற்றியதையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்புதிய தலைமுறை
Published on

பெங்களூருவில் இருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பற்றியதையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு நேற்று நள்ளிரவு 11 மணிக்கு விமானம் புறப்பட்டது. இதில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில மணித் துளிகளில், விமானத்தின் இன்ஜினில் தீ பற்றிய எரிந்துள்ளது.

ஏர் இந்தியா விமானம்
ஸ்வாதி மலிவால் புகார் : கைது செய்யப்பட்ட பிபவ் குமார்! 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

இதனை அறிந்த விமானி, உடனடியாக பெங்களூரு விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதனையடுத்து, விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமான இன்ஜினில் தீப்பற்றியது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com