காஷ்மீரில் பதட்டம் : விமானக் கட்டணத்தை சரி செய்தது ஏர் இந்தியா 

காஷ்மீரில் பதட்டம் : விமானக் கட்டணத்தை சரி செய்தது ஏர் இந்தியா 
காஷ்மீரில் பதட்டம் : விமானக் கட்டணத்தை சரி செய்தது ஏர் இந்தியா 
Published on

ஸ்ரீநகரிலிருந்து விமானக்கட்டணம் ரூ.9500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் ஊடுருவல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கு வந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். ஸ்ரீநகரிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

டெல்லி செல்வதற்கு விமான கட்டணம் 11 ஆயிரம் ரூபாயிலிருந்து 40ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது என்றும் இதே போன்று பிற இடங்களுக்கு செல்வதற்கும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் கட்டணம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15 வரை  ஸ்ரீநகருக்கோ அல்லது ஸ்ரீநகரில் இருந்து செல்லவோ விமானக்கட்டணம் ரூ.9500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்தின் குறைவான கட்டண அறிவிப்பால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கே ரூ.40 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தக் குறைந்த கட்டணம் அதிக பயனுள்ளது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com