ஆந்திராவை அலறவைத்த மர்ம நோய்க்கான காரணம் என்ன?- எய்ம்ஸ் வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை

ஆந்திராவை அலறவைத்த மர்ம நோய்க்கான காரணம் என்ன?- எய்ம்ஸ் வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை
ஆந்திராவை அலறவைத்த மர்ம நோய்க்கான காரணம் என்ன?- எய்ம்ஸ் வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை
Published on

ஆந்திராவை அலறவைத்த மர்ம நோய்க்கான உண்மை காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வறிக்கை கூறுவது என்ன?

டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஆந்திராவை ஆட்டிப்படைத்து வருகிறது இனங்கண்டறியப்படா தொற்று. சிறுவர்கள், பெரியவர்கள் என வித்தியாசம் இல்லாமல் தாக்கிய இந்த நோயால் ஏராளமானோர் தொடர் வாந்தி, தலைச்சுற்றல், வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகினர். இந்த நோய் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் ஏற்பட்ட இந்த பாதிப்ப்புக்கான காரணத்தை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், நரம்பியல் துறை வல்லுனர்கள், சுகாதாரத்துறையினர் என பலத்துறையினர் ஆந்திராவில் குவிந்தனர். லெட் மற்றும் நிக்கல் போன்ற ரசாயனம் பாதிக்கப்பட்டோரின் இரத்தத்தில் கலந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் எலூர் மக்கள் திடீரென மயங்கி விழுந்ததற்கு, வேளாண் சாகுபடியின்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என எய்ம்ஸ் மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்தானது காய்கறி, அரிசி மற்றும் தண்ணீர் மூலம் கலந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் பூச்சிக்கொல்லி மருந்து மனித உடலில் எப்படி உட்புகுந்தது என்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ஆர்கனோக்ளோரின் என்ற பூச்சிக்கொல்லி மருந்தே பாதிக்கப்பட்டோரின் உடலில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பூச்சிக்கொல்லி மருந்துக்கு பல்வேறு வளரும் நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற விபரீத சம்பவம் நடைபெறாத வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பரிசோதனை மையம் அமைக்கவேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோரின் ரத்தத்தில் ஈயம் மற்றும் லெட் அதிகரிக்க காரணம் என்ன என்பதை கண்டறியுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com