லேசான கொரோனா அறிகுறிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கவேண்டாம் - எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

லேசான கொரோனா அறிகுறிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கவேண்டாம் - எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை
லேசான கொரோனா அறிகுறிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கவேண்டாம் - எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை
Published on

லேசான கொரோனா அறிகுறிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கவேண்டாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரன்தீப், ‘’இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சிடி ஸ்கேன் செய்தும், சிலருக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அவசியமின்றி போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்-ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். குறிப்பாக இளைஞர்கள் தீங்கு விளைவிக்கும் கதிர்களுக்கு ஆளாகும்போது அது எதிர்காலத்தை பாதிக்கும்.

எனவே கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் முதலில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com