கொரோனா தடுப்பு மருந்து எட்டு முதல் பத்து மாதங்களுக்கும் கூடுதலாக நல்ல வீரியத்துடன் வேலை செய்யும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“கொரோனா தடுப்பு மருந்து 8 முதல் 10 மாதத்திற்கும் கூடுதலாக வீரியத்துடன் வேலை செய்யும். இதுவரை பெரிய அளவிலான பக்க விளைவுகள் தொடர்பான தொந்தரவுகள் எதுவும் பதிவாகவில்லை. தற்போது இந்தியாவில் செலுத்தபட்டு வரும் இரண்டு மருந்துகளும் ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்திகளை தான் உடலில் உருவாக்கி வருகின்றன. அதனால் இரண்டுமே சிறந்த மருந்து தான். அதிகளவில் தடுப்பு மருந்து கிடைத்தால் அனைவருக்கும் செலுத்தப்படும்.
அதுதவிர இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து அதிகரிக்க காரணமே மக்கள் தொற்று பதிப்பு முடிந்துவிட்டது என எண்ணி சகஜ நிலைக்கு திரும்பியது தான்” என அவர் தெரிவித்துள்ளார்.