60 யானைகளின் உயிரைக் காப்பாற்றிய AI தொழில்நுட்பம்! எப்படி தெரியுமா?

அசாமின் ஹபாய்பூர் பகுதியில் உள்ள ரயில் பாதையில் கடந்த16-ஆம் தேதி சுமார் 60 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று தண்டவாளத்தை கடந்தது. இதை ஏஐ தொழில்நுட்ப வசதி மூலம் முன்னதாகவே அறிந்த ரயில் ஓட்டுநர் உமேஷ் குமார் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்
யானை
யானைபுதியதலைமுறை
Published on

ரயில் பாதைகளில் குறுக்கே யாராவது வருகிறார்களா என்பதை தொலைவிலிருந்தே அறிவதற்காக உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் ஏராளமான யானைகளின் உயிர்களை
பாதுகாக்க கைகொடுத்துள்ளது.

ஏஐ தொழில் நுட்பம் பல வழிகளில் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில், காட்டு விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறக்கும் நிகழ்வு நடக்காமல் இருக்க ஏஐ தொழில்நுட்பமானது ரயிலில் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி ஒரு ரயிலில் இருந்த ஏஐ தொழில் நுட்பம் , யானைகளின் உயிரை காத்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது ஃபேஸ்புக் சமூகதள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், அசாமின் ஹபாய்பூர் பகுதியில் உள்ள ரயில் பாதையில் கடந்த16-ஆம் தேதி சுமார் 60 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று தண்டவாளத்தை கடந்தது.

இதை ஏஐ தொழில்நுட்ப வசதி மூலம் முன்னதாகவே அறிந்த ரயில் ஓட்டுநர் உமேஷ் குமார் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.

இதனால் ஏராளமான யானைகள் உயிர் தப்பியதாக சுப்ரியா சாகு
தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை அருகே உள்ள மதுக்கரையிலும் இது போன்ற தொழில்நுட்பம் மூலம் ஏராளமான யானைகள் இறப்பை தடுக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மருத்துவத்துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு
முன்பு வனத்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com