மரண தண்டனை குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.. பதிலளித்த AI வழக்கறிஞர்!

அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்ட செயற்கை நுண்ணறிவு, தற்போது நீதித்துறையிலும் நுழைந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்ANI
Published on

இணையவெளியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது சாட் ஜிபிடி எனப்படும் ஏஐ சாட்பாட். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த சாட்ஜிபிடி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு விரைவாகவும் துல்லியமாகவும் பதில் தருகிறது. என்றாலும் இதன்மூலம் பாதிப்பும் மோசடியும் இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில், அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்ட இந்த செயற்கை நுண்ணறிவு தற்போது நீதித்துறையிலும் நுழைந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்புவிழாவின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல் | கமலா கோட்டைவிட்டது எங்கே? ட்ரம்ப் தட்டித் தூக்கியது எங்கே? 13 முக்கிய பாயிண்ட்ஸ்!

டி.ஒய்.சந்திரசூட்
'சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தால் மனித வேலைகள் பறிபோகுமா?' - டிசிஸ் அதிகாரி ’சார்ப்’ பதில்

மேலும் அவரிடம், "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா" என அந்த வழக்கறிஞரைச் சோதிக்கும் வகையில் கேள்வி ஒன்றையும் எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அந்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு குற்றம் மிகக் கொடூரமாக இருக்கும்போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது. இந்தப் பதில் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களைக் கவர்ந்தது.

டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் விரைவடைய முடிவுற இருக்கிறது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரைக்கப்பட்டு, அவர் வரும் நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விரைவில் பதவியேற்பு.. தயாராகும் வெள்ளைமாளிகை.. லிங்கனின் ஆவி நடமாடுவதாக மீண்டும் கட்டுக்கதை வைரல்!

டி.ஒய்.சந்திரசூட்
60 யானைகளின் உயிரைக் காப்பாற்றிய AI தொழில்நுட்பம்! எப்படி தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com