’நல்ல காற்று வேணும்’: விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி!

’நல்ல காற்று வேணும்’: விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி!
’நல்ல காற்று வேணும்’: விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி!
Published on

நல்ல காற்று வேண்டும் என்பதற்காக விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் ஏர்- இந்தியா விமானம் கடந்த திங்கட்கிழமை இரவு, சென்றுகொண்டிருந்தது. மும்பையில் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானம் உட்பட பல்வேறு விமானங்கள், கோவா விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டன. கோவா வந்த ஏர் இந்தியா விமானம் நீண்ட நேரமாக விமான நிலையத்திலேயே நின்றது. 

விமானத்துக்குள் அவசரகால வழி அருகே அமர்ந்திருந்த ஒரு பயணிக்கு அங்கு இருக்க முடியவில்லை. அமைதியில்லாமல் இருந்த அவர், திடீரென்று அவசரகால வழியின் கதவைத் திறக்க முயன்றார். இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் அவரை தடுத்து நிறுத்தினர். ‘என்னாச்சு?’ என்றனர். ‘எனக்கு மூச்சுவிட கஷ்டமா இருக்கு. ஃபிரெஷ் காற்று வந்தா நல்லாருக்கும்னு திறக்க முயன்றேன்’ என்றார் அவர். அவர் முதன்முறையாக விமானத்தில் பயணிப்பவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவரை ஏர் இந்தியா நிர்வாகம் எச்சரித்து விடுவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com