சீட் பெல்ட்டில் டேக் நம்பர் இல்லை: ’ஏர் இந்தியா’வை நிறுத்திய அமெரிக்கா

சீட் பெல்ட்டில் டேக் நம்பர் இல்லை: ’ஏர் இந்தியா’வை நிறுத்திய அமெரிக்கா
சீட் பெல்ட்டில் டேக் நம்பர் இல்லை: ’ஏர் இந்தியா’வை நிறுத்திய அமெரிக்கா
Published on

ஏர்-இந்தியா விமானத்தின் சீட் பெல்ட்டில், டேக் நம்பர் இல்லாததால் அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் விமானத்தைத் தடுத்து நிறுத்தியது.

அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் -இந்தியா விமானம் சென்று வருகிறது. வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமை போயிங்-777 (VT-ALK) என்ற ஏர்-இந்தியா விமானம் டெல்லிக்குப் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் திடீரென சோதனை நடத்தியது. சில சீட் பெல்ட்களில் தொழில்நுட்ப தர நிர்ணய எண் (TSO)  இல்லாதது தெரிய வந்தததை அடுத்து விமானம் புறப்பட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு போயிங்-777(VT-ALJ) விமானத்துக்கு ஏர்-இந்தியா ஊழியர்கள் புறப்பட்டனர். அந்த விமானத்தில் இருந்த சீட் பெல்ட்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் சிகாகோ வந்து மாற்றினர். இதையடுத்து விமானம் டெல்லி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக 342 இருக்கைகள் கொண்ட ஏர் -இந்தியா விமானம் 8 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.

டேக் எண் இல்லாத பயணிகள் இருக்கை பயன்பாட்டில் இல்லை என்ற ஏர் இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஏற்காததால் அந்நிறுவனம் அதிருப்தி அடைந்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com