ஆண்களின் திருமண வயது 18 ஆக குறைகிறதா..?

ஆண்களின் திருமண வயது 18 ஆக குறைகிறதா..?

ஆண்களின் திருமண வயது 18 ஆக குறைகிறதா..?
Published on

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகங்கள் இடையே ஒரு கூட்டமும் நடைபெற்றதாக தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘தி பிரிண்ட்’ இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் படி பெண்களுக்கு திருமண வயது 18-ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் உள்ளது. இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆண்களுக்கான திருமண வயதை 18-ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அதேபோல தற்போது உள்ள சட்டத்தின்படி, திருமண வயதை அடைவதற்கு முன்பு இருவர் திருமணம் செய்துவிட்டு, அவர்கள் இருவரும் திருமண வயதை அடைந்த பிறகு சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டால் இந்தத் திருமணம் செல்லும். 

இதனைச் சட்டத்திருத்ததின் மூலம் மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி இனிமேல் திருமண வயதை அடையாத இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமணம் உடனடியாக செல்லாதது ஆகிவிடும். மேலும் குழந்தை திருமணத்தை செய்து வைப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களுக்கு வழங்கப்படும் சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அபராத தொகையையும் ஒரு லட்சத்திலிருந்து 7 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com