மணிப்பூரில் பயங்கரம் | 3 குழந்தைகளுக்கு தாயான பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிப்பு!

2023 மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. இதில் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்கூகுள்
Published on

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வன்முறைக் காடாக மாறியது மணிப்பூர்.

2023 மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. இதில் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிர கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலரும் அண்டை மாநிலங்களில் குடியேறினர்.இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.

சூரையாடப்பட்ட வீடு
சூரையாடப்பட்ட வீடு

இந்நிலையில், கடந்து மூன்று மாதங்களாக வன்முறை ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்த மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் நடக்கத்துவங்கியுள்ளது.

கடந்த வியாழன் இரவு 9 மணியளவில் ஹமர் ஆதிக்கம் செலுத்தும் மணிப்பூர் கிராமத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சிலர், கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜாரான் கிராமத்தில் பழங்குடி இனத்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் உடமைகளை, மற்றும் பொருட்களை சூரையாடியதுடன், தூப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் இருக்கும் 17 வீடுகளுக்கு தீவைத்து எரித்துள்ளனர். அத்துடன் அல்லாமல் பழங்குடி இனத்தைச்சேர்ந்த 3 முழந்தைகளின் தாயான ஒரு ஜோசங்கிம் என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துள்ளனர்.

இருப்பினும் இப்பகுதியில் பாதுகாப்பிற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிறுத்தப்பட்டும் அவர்களை மீறி இச்செயலை மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் செய்ததாக குக்கி இன மக்கள் தெரிவிக்கின்றனர்.

எரிக்கப்பட்ட வீடு
எரிக்கப்பட்ட வீடு

இச்சம்பவத்திற்கு, பெர்சாவ்ல் மற்றும் ஜிரிபாம் மாவட்டங்களின் பழங்குடியினர் வக்கீல் குழு (ITAC) வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இறந்த பெண்னின் உடலை இன்னும் உடற்கூராய்வு செய்யாத நிலையில், அஸ்ஸாமில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையை நடத்த ஜிரிபாமின் காவல் கண்காணிப்பாளர் ராபின்சன் சிங் (எம்பிஎஸ்) மாவட்ட நீதிபதியிடம் அனுமதி கோரியுள்ளார்.

மீண்டும் பதற்ற நிலை உருவானதைத் தொடர்ந்து, பெரும்பாலான கிராமவாசிகள் இப்போது அருகிலுள்ள பகுதியில் இருக்கும் தங்கள் முஸ்லிம் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று பிரபல பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com