மீண்டும் புனேவில் அரங்கேறிய கார் விபத்து! அதிவேக கார் மோதி 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பெண்!

புனே அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட காரில் ஒன்று சாலையை கடக்க சென்ற பெண் மீது மோதியதில் அவர், தூக்கி எரியப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா கார் விபத்து
மகாராஷ்டிரா கார் விபத்துமுகநூல்
Published on

புனே அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட காரில் ஒன்று சாலையை கடக்க சென்ற பெண் மீது மோதியதில் அப்பெண் தூக்கி எரியப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

சமீபத்தில்தான், புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன், மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டியதில், இரு தம்பதிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தவகையில், புனே அருகே மீண்டும் ஒரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான ஜூன் 12 ஆம் தேதி அன்று, புனேவின் மகாரஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில், ஸ்வராஜ் சௌக்கில் அதிவேகமாக வேகன் - ஆர் என்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வந்துள்ளது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, இடது புறமாக அதிவேகமாக வந்த கார், அப்பெண் மீது மோதியதில் அவர், கிட்டதட்ட 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் பதைப்பதைக்கவே, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சாரதி என்பவரே அப்பெண்னை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான இது குறித்த காட்சிகள் பெண் தூக்கி வீசப்பட்டதை விவரிக்கும் நிலையில், அது காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து, போலீஸ் அதிகாரி சிவாஜி பவார் தெரிவிக்கையில், ”விபத்திற்குப் பிறகு காயமடைந்த பெண் 40 வயதான ரேகா ஜோராம் சவுத்ரி என்பவர் என தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த இவருக்கு,ஓட்டுநர் மூலம் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக இருக்கிறார்.”என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா கார் விபத்து
உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்காத பிரதமர் மோடி! உலக நாடுகளுக்கு சொல்லும் செய்தி என்ன?

இந்நிலையில், விபத்து காரணமான 24 வயதான சாரதி என்ற ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விசாரணையில் மூலம், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குடிபோதையில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், வேகத்தை குறைக்க தவறியதால் இந்த விபத்து ஏற்பட்டதா, இல்லை காரின் கோளாறா என்று தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து நிகழ்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஹிஞ்சேவாடி பகுதியில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா கார் விபத்து
புனே விபத்து: குப்பையில் வீசப்பட்ட பரிசோதனை மாதிரிகள்.. மருத்துவர்களுக்கு காவலர்கள் வைத்த ட்விஸ்ட்!

முன்னதாக,புனேவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்திலேயே ஜாமீன் கிடைத்ததும், சிறுவனின் தவறை மறைக்க குடும்பமே அதில், அடுத்தடுத்த தவறை செய்ததும் அம்பலமாகி இருக்கும் சூழலில், இதே போன்ற தொடர் கார் விபத்து தொடர் கதையாக மாறிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com