கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதா: மபி அமைச்சரவை ஒப்புதல்

கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதா: மபி அமைச்சரவை ஒப்புதல்
கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதா: மபி அமைச்சரவை ஒப்புதல்
Published on

கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்தியப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. ஏற்கனவே உத்திரப்பிரதேச மாநிலத்தில் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்தியப்பிரதேச அரசும் கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் தனி நபரோ, நிறுவனத்தைச் சார்ந்தவரோ அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1-5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மதம் மாற்றப்பட்ட நபர் ஒரு பட்டியலின அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் அல்லது வயது குறைந்தவராக இருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார். மேலும் தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com