சீக்கிய இளம் பெண் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட புகாரில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் நன்கனா சாஹிப் பகுதியைப் சேர்ந்த 19 வயது சீக்கிய பெண் ஒருவர் கடத்தி கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பாகிஸ்தான் பிரதமருக்கு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அம்ரீந்தர் தன்னுடைய ட்வீட்டரில், “சீக்கிய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தி இஸ்லாமிற்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் மீது பிரதமர் இம்ரான் கான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வெளியுறத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.