வெடிகுண்டு மிரட்டல் | 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட 8 விமானங்கள்.. சோதனையில் வெளிவந்த தகவல்!

கடந்த 48 மணி நேரத்தில் 8 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியாஎக்ஸ் தளம்
Published on

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இன்று பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஐந்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. சோதனைக்குப்பின் அவை அனைத்தும் போலி மிரட்டல் எனத் தெரியவந்தது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டது.

இதையும் படிக்க: பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

ஏர் இந்தியா
”விமானம் வெடிக்கப் போகிறது” ஆகாசா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

அடுத்து, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தமாம் (சவுதி அரேபியா)- லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா- மும்பை ஸ்பைஸ்ஜெட், சிலிகுரி- பெங்களூரு ஆகாசா ஏர் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்பு அமைப்புகளால் பயங்கரவாத தடுப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.

இதேபோன்று நேற்று மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வகையில் இண்டிகோ நிறுவனத்தால் இயக்கப்படும் இரண்டு விமானங்களுக்கும் ஏர் இந்தியாவினால் இயக்கப்படும் ஒரு விமானத்திற்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தவிர, மும்பையில் இருந்து நியூயார்க் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானமும் புதுடெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அவைகளும் புரளி எனத் தெரியவந்தது. மொத்தத்தில் கடந்த 48 மணி நேரத்தில், எட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: வைரலாகும் தனி அந்தரங்க வீடியோ|சோஷியல் மீடியாவின் அநாகரிக முகமும்.. நடிகை ஓவியாவின் கூலான பதில்களும்!

ஏர் இந்தியா
முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதென வந்த மின்னஞ்சல்; பதற்றமடைந்த அதிகாரிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com