இந்திய இராணுவத்திற்கு சவாலான பணியாக இருப்பது பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைப்பகுதிகள். இங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது அவ்வளவு சுலபமில்லை. மிகுந்த விழிப்போடும், சண்டைக்கு தயார் நிலையிலும் இராணுவம் இருக்கும். இதற்கிடையில் தீவிரவாதிகள் ஊடுருவல்.
இந்நிலையில்தான் எல்லைப் பாதுகாப்பில் , குறிப்பாக பாகிஸ்தான், சீனா எல்லையில் காவலில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக SIG Sauer என்ற அமெரிக்க நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 72 ஆயிரம் துப்பாக்கிகளை வாங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை மிக அதிநவீனமான, தாக்குதல் படைகளின் முதல்வரிசை வீரர்களுக்கு வழங்கப்படும் துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு, ரஷ்ய நிறுவனம் ஒன்றோடு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் உ.பி.யில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மூலம் 12ஆயிரம் கோடி செலவில் நவீன துப்பாக்கிகள் மற்றும் உபகரணங்கள் தயார் செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்த துப்பாக்கிகளையே வீரர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் அமெரிக்க தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கிகள் அவர்களுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது