கொரோனாவினால் இந்த ஆண்டு முழுவதுமே உலகளவில் தொழிலாளர்களுக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.
நிதி சிக்கலை தவிர்ப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குறைக்கும் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலகளவில் அரை மில்லியன் ஊழியர்களைக் கொண்ட தொழில்முறை சேவை நிறுவனமான அக்சென்ச்சர் பணிநீக்கம் நடவடிக்கையையே மேற்கொள்ள உள்ளதாக ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிப்போர்ட்ஸ் (ஏ.எஃப்.ஆர்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அக்சென்ச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகஸ்டின் மூன்றாம் வாரத்தில் அக்சென்ச்சர் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் நடத்திய உள் பணியாளர் சந்திப்பை இந்த அறிக்கை மேற்கோள் காட்டி உள்ளது.
இந்தியாவில் மட்டுமே சுமார் 2 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள அக்சென்ச்சரில் பெருமளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அக்சென்ச்சர் இதை மறுத்துள்ளது.