நூறாண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ள பட்ஜெட் தாக்கல் முறை மாறி முதல் முறையாக பிப்ரவரி முதல் தேதியில் மத்திய பட்ஜெட் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம்.
பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், பட்ஜெட் சீர்திருத்தங்கள் நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாகக் கருதப்பட்டது. இந்த தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்தாண்டு முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி இறுதியில் தொடங்கி, பிப்ரவரி மாதம் முதல் தேதியிலேயே பட்ஜெட் தாக்கல் செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பட்ஜெட் சீர்திருத்தங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலே அமலாக வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், மத்திய அரசிலிருந்து மாநில அரசுகளுக்கும் விரைவில் நிதி சென்று சேரும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.