7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் முடிவடைந்த உடனே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றும் அதிமுகவைவிட பாஜக அதிக இடங்களை வெல்லும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த முடிவுகள் உண்மையாக மாறினால், பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் கருத்து கணிப்பு முடிவுகள் பொய்யாக்கும் விதமான அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன். தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் I.N.D.I.A. கூட்டணியை விட்டுவிட்டு பாஜகவுக்கு திமுக ஆதரவளிக்கும் என அவர் குற்றஞ்சாட்டினார்.
கருத்துக் கணிப்புகளை அதிமுக பொய்யாக்குமா? பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி நிரூபிப்பாரா? கடந்த மக்களவைத் தேர்தலை விட கூடுதல் இடங்களில் அதிமுக வெற்றி பெறுமா? என்பது எல்லாம் நாளை (தேர்தல் முடிவு நாள்) தெரிந்துவிடும்.