உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி தருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழு விமர்சித்துள்ளது.
பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆதித்யநாத், மத வெறியை தூண்டிவிடுபவர் என்றும் மார்க்சிஸ்ட் அரசியல் உயர் மட்டக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலின் பேரிலேயே ஆதித்யநாத்தை முதல்வராக்கும் முடிவை பாரதிய ஜனதா தலைமை எடுத்தள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற சூழலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக அங்குள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.