5ஜி அலைக்கற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதானி குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்ப காலம் ஜூன் 26 ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 4ஆவது நிறுவனமாக அதானி குழுமம் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 26ஆம் தேதி 72 ஆயிரத்து 97 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ளது.