நடிகர் சோனு சூட் சட்டவிரோத கட்டுமானத்தில் 'பழக்கப்பட்டவரே'! - மும்பை மாநகராட்சி

நடிகர் சோனு சூட் சட்டவிரோத கட்டுமானத்தில் 'பழக்கப்பட்டவரே'! - மும்பை மாநகராட்சி
நடிகர் சோனு சூட் சட்டவிரோத கட்டுமானத்தில் 'பழக்கப்பட்டவரே'! - மும்பை மாநகராட்சி
Published on

"பாலிவுட் நடிகர் சோனு சூட் சட்டவிரோத கட்டுமானத்தில் 'பழக்கப்பட்டவர்தான்'  அவரின் சட்டவிரோத கட்டுமானங்களில் ஏற்கெனவே இரண்டு முறை இடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், புறநகர் ஜுஹூவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்" என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மும்பை குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி) தனக்கு எதிராக வழங்கிய நோட்டீஸை எதிர்த்து சோனு சூட் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த வாக்குமூலம்  மும்பை மாநகராட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாடி குடியிருப்பு கட்டிடமான 'சக்தி சாகர்'-ல் சோனு சூட் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ததாகவும், அதை வணிக ஹோட்டலாக மாற்றுவதாகவும் பி.எம்.சி தனது அறிவிப்பில் குற்றம்சாட்டியிருந்தது.

"மேல்முறையீட்டாளர் முறைகேடுகளில் பழக்கமானவர்தான். மேலும் அங்கீகரிக்கப்படாத பணியின் வணிக வருமானத்தை அனுபவிக்க அவர் விரும்புகிறார். எனவே இடித்த பகுதியை சட்டவிரோதமாகவும், உரிமத் துறையின் அனுமதியுமின்றி ஒரு ஹோட்டலாக செயல்படுத்துவதற்காக மீண்டும் புனரமைக்கத் தொடங்கினார்" என்று மும்பை குடிமை அமைப்பு வாக்குமூலத்தில் கூறியது.

செப்டம்பர் 2018 இல் சோனுசூட்டின் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக ஆரம்ப நடவடிக்கை தொடங்கப்பட்டதாக பிஎம்சி கூறியது. ஆனால் அவர் கட்டுமான பணிகளைத் தொடர்ந்தார். நவம்பர் 12, 2018 அன்று, அங்கீகரிக்கப்படாத பணிகளை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. "மேல்முறையீட்டாளரின் துணிச்சலாக மீண்டும் மாற்றங்களைத் தொடங்கினார். இடிக்கப்பட்ட பகுதியை புனரமைத்தார். எனவே, பிஎம்சி மீண்டும் பிப்ரவரி 14, 2020 அன்று இடிப்பு நடவடிக்கை எடுத்தது" என்று வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாடி சக்தி சாகர் கட்டிடத்தில் எந்தவொரு சட்டவிரோத அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று சோனு சூட் தனது மனுவில் கூறியிருந்தார். "சோனு சூட் பி.எம்.சி யிடம் அனுமதி பெறும் கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மகாராஷ்டிரா பிராந்திய மற்றும் நகர திட்டமிடல்  சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன" என்று அவரது வழக்கறிஞர் அமோக் சிங் வாதிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com