குர்மித் ராம் ரகிம் சிங், அஸ்ராம் பாபு, நித்யானந்தா, ராதே மா எல்லோரும் கிரிமினல் சாமியார்கள் என இந்திய நடிகர் ரிஷி கபூர் சாடியுள்ளார். இவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து குர்மித் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இக்கலவரம் தொடர்பாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்கள், கார்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் ரிஷி கபூர், ’தன்னைத்தானே சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் குர்மித், அசாராம் பாபு, நித்யானந்தா, ராதே மா உள்ளிட்டவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் கிரிமினல்கள் என்று சாடியுள்ளார். அதோடு, குர்மித் ஆதரவாளர்களால் பொதுசொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குர்மித் ஆசிரம சொத்துக்களை விற்று அதற்கு நஷ்ட ஈடு பெற வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.