இந்தியாவில் உணவுப் பொருட்கள் வீணாவதைத் குறைக்க அரசு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள ஹர்சிம்ரத் அந்நாட்டு தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் வெறும் 10 சதவிகித உணவுப் பொருட்கள் மட்டுமே பதப்படுத்தப்பட்டவை என்பதால், அவ்வப்போது தயாராகும் 90 சதவிகித உணவில் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாகக் கூறினார். மேலும் அவர் இந்தியாவில் உணவுப் பொருட்கள் வீணடிப்பைக் குறைக்க அரசு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.