கொரோனா அறிகுறியுடன் வந்தவர் குறித்து அரசுக்கு தெரிவித்த மருத்துவர் பணிநீக்கம்?

கொரோனா அறிகுறியுடன் வந்தவர் குறித்து அரசுக்கு தெரிவித்த மருத்துவர் பணிநீக்கம்?
கொரோனா அறிகுறியுடன் வந்தவர் குறித்து அரசுக்கு தெரிவித்த மருத்துவர் பணிநீக்கம்?
Published on

கொரோனா அறிகுறியுடன் வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, தனியார் மருத்துவமனை மீது பெண் டாக்டர் புகார் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வந்துள்ளார். அவரை ஷினு சியாமளன் என்ற மருத்துவர் பரிசோதித்தார். அப்போது அவர், தான் கத்தாரில் இருந்து வருவதாகவும், இதுபற்றி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். உடனே டாக்டர் ஷினு அவரிடம் இதுபற்றி சுகாதார துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.

அதற்கு அவர் மறுத்ததுடன், தான் கத்தாருக்கு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவர் ஷினு அவர் பற்றி காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் கொரோனா அறிகுறியுடன் வந்தவர் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்ததற்காகவும், தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்காகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தன்னை பணிநீக்கம் செய்துள்ளதாக பெண் மருத்துவர் ஷினு புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com