பயிற்சி மருத்துவர் கொலை | பல முறை திருமணம், ஆபாசப்படத்திற்கு அடிமை..குற்றவாளி குறித்த பகீர் பின்னணி!

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் குற்றவாளியை குறித்த பகீர் கிளப்பும் பின்னணிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்முகநூல்
Published on

கொல்கத்தா ஆர்ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி பயிற்சி மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடற்கூராவின் முடிவுகள், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கிறது. இந்நிலையில், மருத்துவரின் இறப்பிற்கு நீதிக் கேட்டு நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவர்கள், செவிலியர் தரப்பில் போராட்டம் வெடித்துள்ளது.

மாணவியை இந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளியான சஞ்சஜ் ராய் சம்பவம் நடந்த மறுதினமே கைது செய்யப்பட்டார். இந்தவகையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலையின் பின்னணி குறித்து, குற்றவாளியின் முகம் சுழிக்கும் பின்னணியை பற்றியும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

போலீசார் அளித்த தகவல்: என்ன நடந்தது?

சம்பவ தினமான ஆகஸ்ட் 8 ஆம் தேதி பெண் மருத்துவ மாணவி உட்பட 5 பேர் ஒலிம்பிக் விளையாட்டை (நீரஜ் சோப்ரா ஆட்டத்தை) கண்டுகளித்து ஒன்றாக இரவு உணவு உண்டுள்ளனர். பிறகு மற்ற நான்கு பேர் உணவு அருந்திய அவ்விடத்திலிருந்து தங்களது பணிக்கு சென்றுள்ளனர். ஆனால், ஒரு பெண் மருத்துவ மாணவி மட்டும், கருத்தரங்கு கூடத்திலேயே படிப்பதற்காக இருந்துள்ளார்.

இந்நிலையில்தான், அதிகாலை 4 மணி அளவில், சஞ்சய் ராய் கருத்தரங்கு கூடத்தில் நுழைந்துள்ளார். அப்போது அவரது காதில் ப்ளூட்டூத் அணிந்திருந்துள்ளார். இதனையடுத்து, உள்ளே சென்ற அவர், சுமார் 40 நிமிடங்கள் கழித்து கருத்தரங்கு கூடத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, அவரது காதில் ப்ளூட்டுத் இல்லை. இந்த தகவல்கள் அனைத்து, கருத்தரங்கு கூடத்தை சுற்றி இருந்த கேமராக்களில் பதிவாகி இருந்ததன் அடிப்படை சஞ்சய் ராய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டு, உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் தெரிந்தது கொலை செய்துவிட்டு , இந்த கொடூரன் பாலியல் வன்கொடுமைக்கு அப்பெண் மருத்துவ மாணவியை ஆளாக்கி இருக்கிறார் என்று.

யார் இந்த கொடூரன் சஞ்சய் ராய்:

சஞ்சய் ராய்க்கு பல ஆண்டுகளாக மூத்த காவல் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு உள்ளது. இதன் காரணமாகவே, அவருக்கு கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையத்தில் தன்னார்வலராக பணிக்கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு குடிமைத்தன்னார்வத் தொண்டராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்த 33 வயதான சஞ்சய் ராய்க்கு, நான்கு முறை திருமணம் நடந்துள்ளது. அவரது முதல் மனைவி பெஹாலா, இரண்டாவது பார்க் சர்க்கஸ், மூன்றாவது பாரக்பூரிலிருந்து, மற்றும் நான்காவது அலிபூரைச் சேர்ந்தவர்.

இவர், தனது மனைவிகளையே உடல் ரீதியாக மிகவும் உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளதாகவும், கொடுமை செய்துள்ளதாகவும் இவரின் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர் . இதன் காரணமாகவே இவரை விட்டு மனைவிகள் பிரிந்து சென்றுள்ளனர்.

மேலும், நான்காவதாக திருமணம் செய்த பெண்ணையும் இவர் உடல்ரீதியாக துன்புறுத்தல் செய்யவே, காவல்நிலையத்தில், இவர் மீது குடும்ப வன்முறைத்தொடர்பாக அப்பெண் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் செல்போனில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த ஏராளமான வீடியோக்கள் ஸ்டோர் ஆகியுள்ளது.

மேலும், மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடன் இவருக்கு இருந்த நெருக்கம் அனைத்து துறைகளிலும் இவர் தடையின்றி அணுக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததுள்ளது. இவர் தவறு செய்தாலும் அதை கேட்கவும் யாரும் துணிய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

சஞ்சய் ராய்
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை: நாடு முழுவதும் வெடித்த போராட்டம்... ப்ளூடூத்-ஆல் சிக்கிய கொலையாளி!

மேலும், பாலியல் வன்கொடுமையின் போது பெண் மருத்துவ மாணவி தப்பிக்க தீவிரமாக போராடியுள்ளார். ஆனால், சஞ்சய் ராய் குத்துச்சண்டையில் திறம் பெற்றவர் என்பதால், அப்பெண்ணை மிக பலமாக தாக்கியுள்ளார்.

எல்லா குற்றங்களையும் செய்த பின் எந்த பதற்றமும் இல்லாமல், தப்பியோடாமல், ரத்தக் கறைகள் இருந்த உடைகளை துவைத்த அந்த கொடூரன், பின்னர் அருகில் உள்ள காவல்பூத்திற்குச் சென்று நன்றாக உறங்கியிருக்கிறார்.

சஞ்சயின் தாய் தெரிவிப்பது என்ன?

இத்தனை ஆதாரங்களுக்கு பின்னும் , கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் தாய், ”எனது மகன், பள்ளியில் என்சிசியில் இருந்துக்கிறார். எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், எனது மகன் நிரபராதி. அவன் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளார், ” என்று தெரிவித்திருக்கிறார்.

சஞ்சய் ராய்
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை: நாடு முழுவதும் வெடித்த போராட்டம்... ப்ளூடூத்-ஆல் சிக்கிய கொலையாளி!

இந்நிலையில், ராய் மீது பிஎன்எஸ் பிரிவு 64 (கற்பழிப்பு) மற்றும் 103 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சூழலில் திவீர விசாரணை ஒரு புறம் நடந்துகொண்டுள்ளது. மறுபுறம் மருத்துவர்கள் இறந்த பெண் மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு தழுவிய தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவ மாணவிக்கு நடந்த துயரம் பலரது இதயங்களையும் நொறுங்கச் செய்துள்ளது. கண்களை ஈரமாக்கியுள்ளது. இன்னும் எத்தனை காலங்களுக்குதான் இதுபோன்ற கொடூரங்கள் நடந்து கொண்டே இருக்கும் என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும்தானா?..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com