உற்பத்தி, கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் ஆகிய துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைவாய்ப்புகள் 29% உயர்ந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் அதிகபட்சமாக 152% வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. மருத்துவ சேவைகள் துறையில் 77 சதவிகிதமும் போக்குவரத்து துறையில் 68 சதவிகிதமும் நிதிச்சேவைகள் துறையில் 48 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கட்டுமானத்துறையில் 42 சதவிகிதமும் கல்வித்துறையில் 39 சதவிகிதமும் உற்பத்தி துறையில் 22 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன.