பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் சலுகைகளை பெற 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிறைத்துறை டிஐஜி ரூபா ஊழல் தடுப்புப்பிரிவில் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வினய் குமார் ஆணையத்தின் பரிந்துரையின் படி சசிகலாவுக்கு உதவிய இரண்டு மூத்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ஊழல் தடுப்புப்பிரிவுக்கு கர்நாடகா அரசு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குனர் சத்தியநாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறை கண்காணிப்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.