மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து காட்ட முடியுமா என தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு வெளிப்படையான சவால் விடுத்திருக்கிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் எனவே ஓட்டுச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் 16 அரசியல் கட்சிகள், குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளன. ஆனால், மின்னணு இயந்திரம் உலகிலேயே பாதுகாப்பான தேர்தல் நடைமுறை என்றும், அதில் முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதற்கிடையே, மே முதல் வாரத்தில் நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் என யார் வேண்டுமானாலும் மின்னணு இயந்திர செயல்பாட்டை மாற்றிக் காட்ட முன்வரலாம் என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது. 10 நாட்களுக்கு இதற்கான அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்கனவே 2009ஆம் ஆண்டில் அளித்திருந்தது.