போர்ச்சுக்கல் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி அபு சலேமை 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வைத்திருக்க முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு முக்கியமானவராக கருதப்படும் தாவூத் இப்ராகிம் கூட்டாளியான அபு சலேம் பாஸ்போர்ட் விதிமுறைகளை மீறியதாக போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்படும் போது இந்தியாவுக்கு போராளிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அபு சலேமிற்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்றும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வைத்திருக்கக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் அபு சலேம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது இந்திய அரசு போர்ச்சுகல் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே குடியரசுத் தலைவர் தனது அதிகார வரம்பு அரசியல் சாசன பிரிவு 72-ஐ பயன்படுத்தி ஒப்பந்தத்தை முழுமை செய்வதற்கான பரிந்துரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
எனவே இது தொடர்பான ஆவணங்களை 25 ஆண்டுகள் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே சரி செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஏற்கனவே இந்த வழக்கில் தடா நீதிமன்றத்தால் அபு சலேமிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்க: ஷின்சோ அபே கொலையும், அக்னிபாத் திட்டமும் - எச்சரிக்கை விடுக்கும் திரிணமூல் காங்கிரஸ்