“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா  

“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா  
“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா  
Published on

இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவே ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் சர்தார் பட்டேலின் கனவ நிறைவேற்றியுள்ளதாக பாஜக தெரிவித்து வந்தது. 

இந்நிலையில் இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை முழுமையாக இணைக்கவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வானவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமித் ஷா, “சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் ஜம்மு- காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நாடாளுமன்றம் அங்கீகரித்துவிட்டது. 

630 சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்திய நாட்டை நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்தார். ஜம்மு- காஷ்மீர் மட்டும் அப்போது விடுபட்டு விட்டது. தற்போது அந்தக் குறை நீங்கிவிட்டது. இந்தியா நாடு பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிபட்டு வருகிறது. ஆகவே இந்தப் பிரச்னைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா வளர்ந்த நாடாக உருவேடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com