இந்தியா முழுவதும், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான சுமார் 10ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பாதுகாப்புத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள 9ஆயிரத்த 622 ஏக்கர் நிலம் நாடுமுழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபடியாக உத்தர பிரதேசத்தில் 2ஆயிரத்து 204 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதற்கு, அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில், ஆயிரத்து 639 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், ஹரியானா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 101 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. கேரளா, மணிப்பூர், ஒடிஷா, கோவா, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்கிரமிப்பு மிக குறைந்தளவில் உள்ளன. ஆக்கிரமிப்பின் பிடியிலுள்ள பாதுகாப்புத்துறை நிலங்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.