நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாலிவுட் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரது செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் இடம்பிடித்து வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனியாக தோன்றினார். இது, மேலும் அவர்களுடைய பிரிவு பற்றிய கேள்விகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், அவர்கள் இருவரும் இதுகுறித்து எதுவும் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில், விவாகரத்து பற்றிய இன்ஸ்டா போஸ்ட்டை அபிஷேக் பச்சன் லைக் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. எழுத்தாளும் பத்திரிகையாளருமான heenakhandlwal என்ற பயனர் பதிவிட்டிருக்கும் அந்தப் பதிவைத்தான் அபிஷேக் லைக் செய்திருக்கிறார்.
'காதல் ஏன் எளிதாக இருப்பதை நிறுத்துகிறது' (when love stops being easy) என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பதிவில், “விவாகரத்து என்பது யாருக்கும் எளிதானது அல்ல. வயதான தம்பதிகள் தெருவைக் கடக்கும்போது கைகோர்த்து நிற்கும் அந்த மனதைக் கவரும் வீடியோக்களை மீண்டும் உருவாக்குவதைப் பற்றி யார் கனவு காண மாட்டார்கள்? ஆனாலும், சில சமயங்களில் நாம் எதிர்பார்த்தபடி வாழ்க்கை அமையாது. ஆனால் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒன்றாகப் பிரிந்த பிறகு, பெரிய மற்றும் சிறிய விஷயங்களுக்கு ஒருவரையொருவர் நம்பியிருக்கும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை மக்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? உறவுகளைத் துண்டிக்க எது அவர்களைத் தூண்டுகிறது, அவர்கள் என்ன சவால்களை எதிர்கொள்கிறார்கள்? இந்தக் கேள்விகளை இந்தக் கதை ஆராய்கிறது. பொதுவாக 50 வயதிற்குப் பிறகு திருமணத்தை கலைக்க விரும்புபவர்களுக்கான விதிமுறைகள், உலகளவில் அதிகரித்து வருகின்றன. காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
அபிஷேக் பச்சன் லைக் செய்திருக்கும் இந்தப் பதிவுக்கு பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ‘இது மோசமானது’ எனத் தெரிவித்தாலும், அபிஷேக்கிற்கு ஆதரவாகவும் சிலர் கருத்திட்டுள்ளனர். ”அது பொதுவான ‘லைக்’ ஆக இருக்கலாம் என்றும், அவர்களுடைய வாழ்க்கைக்கும் இதற்குச் சம்பந்தம் இல்லை” என்றும் பதிவிட்டுள்ளனர்.