இந்திய விமானப்படை நாள் கொண்டாட்டத்தில் பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட வீரர்கள் விமானத்தை இயக்கி உள்ளனர்.
இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக விமானப்படை சார்பில் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியிலுள்ள ஹிந்தான் தளத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள் விமானப்படையின் அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
இதில் விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார். அவருடன் 3 மிராஜ்-2000 ரக விமானம் மற்றும் 2 எஸ்.யூ-30எம்கேஐ ரக விமானம் ‘அவெஞ்சர்’ அணிவகுப்பை நடத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியில் விமானப்படையின் வீரர்கள் கச நிகழ்ச்சிகளை நடத்தினர். இவ்விழாவில் விமானப்படையின் தளபதி பதவ்ரியா, ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.