புகார் எதிரொலி| பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப் பெற்ற அபோட் இந்தியா நிறுவனம்..என்ன காரணம்?

புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பெனிசிலின் ஜி-வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அபோட் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபோட் இந்தியா நிறுவனம்
அபோட் இந்தியா நிறுவனம்எக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட், ஆன்டிபயாடிக் மருந்துகளில் சிலவற்றைத் தயாரித்துவருகிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் பெனிசிலின் மருந்தான பென்டிட்ஸ் மருந்துகள், பாக்டீரியா தொற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல், தொண்டை, மூக்கு, தோல் போன்றவற்றில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெனிசிலின் மருந்தான பென்டிட்ஸ் 800, பென்டிட்ஸ் 400, பென்டிட்ஸ் 200 ஆகிய மாத்திரைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்துமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

பென்டிட்ஸ் மாத்திரைகள் வழக்கமானதை விட சற்று அதிகக் காற்று அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு மொத்த விற்பனையகங்கள் மற்றும் மருந்துக் கிடங்குகளுக்கு அபோட் நிறுவனம் கடிதம் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: நடுவர் கொடுத்த அவுட்; விரக்தியில் ஹெல்மெட்டை பேட்டால் அடித்து சிக்ஸருக்கு அனுப்பிய வீரர் #Viralvideo

அபோட் இந்தியா நிறுவனம்
மீண்டும் எழுந்த சிக்கல்! குழந்தைகளின் பிரபல இருமல் மருந்து.. 6 ஆப்ரிக்க நாடுகளில் விற்க தடை!

மாத்திரை வில்லைகளில் காற்று அதிகம் நிரப்பப்பட்டது போன்று இருப்பதால் மாத்திரைகள் திரும்பப் பெறப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை, புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட அகும் டிரக்ஸ் மற்றும் ஃபார்மாக்யூடிக்கல்ஸ் நிறுவனத்தின் (ஒப்பந்த அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனம்) மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, மருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை, அபோட் இந்தியா நிறுவனத்தின் மற்ற மருந்துகள் மற்றும் இதற்கு மாற்றாக இருக்கும் மருந்துகள் எதையும் பாதிக்காது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம், பிரெஞ்சு மருந்து நிறுவனமான சனோஃபி, அதன் பிரபலமான ஒவ்வாமை எதிர்ப்பு பிராண்டான அலெக்ரா சஸ்பென்ஷன் சிரப் மற்றும் வலி நிவாரணி மருந்தான காம்பிஃப்லாம் சஸ்பென்ஷனை இந்திய சந்தையில் இருந்து தானாக முன்வந்து திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பிய ஜாகீர் கான்.. லக்னோ அணி ஆலோசகராக நியமனம்!

அபோட் இந்தியா நிறுவனம்
புரியாமல் எழுதக்கூடாது! இனி மருந்து சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில்தான் எழுதணும் - அதிரடி உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com