3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதி: வாக்களித்த பின் கெஜ்ரிவால் பேட்டி

3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதி: வாக்களித்த பின் கெஜ்ரிவால் பேட்டி
3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதி: வாக்களித்த பின் கெஜ்ரிவால் பேட்டி
Published on

ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக டெல்லியை கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியின் தற்போதைய முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய டெல்லியில் உள்ள நிர்மான் பவனில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்னர் மனைவி சுனிதா, மகன் உடன் வாக்களித்த அடையாளத்தை காட்டி கெஜ்ரிவால் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வாக்களிக்க வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் தனது தாய் கீதா தேவியிடம் ஆசி பெற்றார் கெஜ்ரிவால். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக டெல்லியை கைப்பற்றும் என்றும் டெல்லி மக்கள் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 6.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் தெரிந்து விடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com