ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா !

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா !
ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா !
Published on

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ. அல்கா லம்பா அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ அல்கா லம்பா ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதன் காரணமாக அல்கா அவரது கட்சிப் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யயுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அல்கா லம்பா “நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன், ஆனால் ராஜீவ் காந்தி நாட்டிற்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார். பாரத ரத்னாவை எடுத்துக் கொள்வதற்கு சட்டமன்றத்தில் நான் முன்மொழிவை ஆதரிக்கவில்லை. நான் கட்சியின் முடிவை எதிர்த்து நின்றதால், ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டனர்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com