திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தேவ்ஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட், வாடகை அறை முன்பதிவு, 300 விரைவு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி சேவை விண்ணப்பம், உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு விண்ணப்பம் உள்பட தேவஸ்தானம் வழங்கி வரும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்கவேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் பாஸ்போர்ட் எண்ணை காட்டலாம் எனக் கூறப்பட்டுள்ளது.