ஆதார் அட்டை மூலம் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சில புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆதார் அட்டை மூலம் பணபரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம், இணையவசதி இல்லாதவர்களும் பணபரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதற்காக, வங்கிகளில் மேலும் 10 லட்சம் ஸ்வைப் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.