அஞ்சலக சேமிப்புகளுக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

அஞ்சலக சேமிப்புகளுக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
அஞ்சலக சேமிப்புகளுக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
Published on

அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் அடையாள அட்டை இன்னும் அனைவருக்கும் கிடைக்காத சூழ்நிலையில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. ஏற்கனவே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில துறைகளில் ஆதாரை கட்டாயமாக்கும் நடைமுறைகளைத் மத்திய அரசு தொடங்கி உள்ளது.

அதன்படி, அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஷ் பத்திரம், பப்ளிக் பிரோவிடண்ட் ஃபண்ட உள்ளிட்ட அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே, அஞ்சலகங்களில் டெபாசிட் செய்து வருபவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com