ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
Published on

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அடையாள எண்ணை கட்டாயமாக்க கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு, நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயம் இல்லாவிட்டாலும் வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட சில அம்சங்களில் ஆதார் எண்ணை அரசு கட்டாயமாக்கியுள்ளதை தாங்கள் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. ஆதார் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேவை என்றும் ஆனால் அது தற்போது சாத்தியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வி உதவித் தொகை, பள்ளி மதிய உணவுத்திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட 30க்கும் அதிகமான நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இவ்வாறு கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com