ஆதார் மனித உரிமை மீறல் இல்லை: மத்திய அரசு

ஆதார் மனித உரிமை மீறல் இல்லை: மத்திய அரசு

ஆதார் மனித உரிமை மீறல் இல்லை: மத்திய அரசு
Published on

ஆதார் அட்டைக்காக கைரேகை, கருவிழி ஆகியவற்றைப் பதிவு செய்வது மனித உரிமை மீறல் ஆகாது என்று உச்சநீதிம‌ன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சமுதாயத்தில் ஒழுங்குமுறையைக் கொண்டு வருவதற்காகவே ஆ‌தார் திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறினார். ‌பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துக் கொண்டு முறையாக வருமான வரி செலுத்தாததால் அரசுக்கு பல கோ‌டி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் வாதாடினார். ஆகவே, பான் அட்டையுடன் ‌ஆதார் எண்ணை இணைப்பதால் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும் எனவும் ரோஹத்கி கூ‌றினார்.

சில நாடுகளில், அடையாள அட்டை வழங்க மரபணு பரிசோதனை கூட நடத்தப்படுவதாகவும் அவர் வாதிட்டார். விமானப் பயணத்திற்குக்கூட முழு சோத‌னைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதையும் முகுல் ரோத்தகி சுட்டிக்காட்டினார். ஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது என்பதாலேயே அதனை கட்டாயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com