ஆதார் அட்டை குளறுபடி: ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கிராமம்.

ஆதார் அட்டை குளறுபடி: ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கிராமம்.
ஆதார் அட்டை  குளறுபடி: ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கிராமம்.
Published on

உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவதாக ஆதார் அட்டையில் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.  

உத்ராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ளது கைந்திகட்டா கிராம். இங்கு 800 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இங்குள்ள மக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பின்பு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அவர்களிடம் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. ஆதார் அட்டையை பெற்றுக் கொண்ட கிராம மக்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆதார் அட்டையிலும் பிறந்த தேதி ’ஜனவரி 1’ என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. பெயர், முகவரி, புகைப்படம் என அனைத்து விவரங்களும் சரியாக அச்சிடப்பட்டிருந்தும் கிராமத்தில் உள்ள அனைவரின் பிறந்த தேதியும் ’ஜனவரி 1’ என்று பதிவாகியுள்ளது. 

ரேஷன், மொபைல் எண், வங்கி கணக்கு என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்கட்சிகள் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி என்று அனைத்து தகவல்களும் தவறுதலாக அச்சிடப்பட்டுவது அரசு ஊழியர்களின் அலட்சியத்தை காட்டுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் மூதாட்டியின் ஆதார் அட்டையில் அவரின் புகைப்படத்திற்கு பதில் சினிமா நடிகையின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com