தொழிலாளர் நலன், குழந்தைகள் நலன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொத்தடிமைகள் மீட்கப்படும்போது அவர்களுக்கானச் சலுகைகள், நலத் திட்டங்கள் பெற ஆதார் விவரங்கள் சேகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்படுவோரிடம் ஆதார் இல்லை என்றால், உடனடியாக ஆதார் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும்போது அவர்களுக்கான சலுகைகளுக்கும் ஆதார் எண் கோரப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஆதார் இல்லாதவர்கள் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆதார் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசின் தொழிலாளர் துறை அமைச்சகம் கூறியுள்ளது.