பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுத் தர முடியும் - அஜிதா பேகம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுத் தர முடியும் என கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம்
கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம்pt desk
Published on

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஏற்கெனவே புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிபதி ஹேமா
நீதிபதி ஹேமாpt desk

அதன்படி, நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) கலைக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம் புதிய தலைமுறைக்கு பிரத்யே பேட்டியளித்துள்ளார்.

கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம்
மலையாள சினிமா|புயலைக் கிளப்பும் பாலியல் புகார்கள்.. தெலுங்கு நடிகைகளுக்கும் பாதிப்பு.. சமந்தா பதிவு!

அதில், "நடிகைகள் கொடுத்த பாலியல் புகார்கள் தொடர்பாக இதுவரை 17 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்குக் கூட தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக வந்து நீதிமன்றத்தில் சாட்சியம் கொடுக்கும் பட்சத்தில் இதற்கு சாத்தியம் உள்ளது.

மோகன்லால்
மோகன்லால்புதிய தலைமுறை
கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம்
மலையாள திரையுலகில் பாலியல் தொல்லை|”நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை”-மவுனத்திற்கு விடைகொடுத்த மோகன்லால்

இந்த குற்றங்களை செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தப்ப முடியாது அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். ஹேமா கமிட்டி புகார்கள் குறித்து இதுவரை நாங்கள் விசாரிக்கவில்லை அது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது" என்று கேரள சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் அஜிதா பேகம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com