நேரு இட்ட மாலையால் ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட பழங்குடியினப் பெண்.. 80 வயதில் காலமானார்!

பீகாரில் நேருவால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட பழங்குடியினப்பெண். தான் வாழ்ந்த ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட அவலம் அரங்கேறிய நிலையில் தற்போது அவரின் மறைவு சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
பழங்குடியினப் பெண்
பழங்குடியினப் பெண் முகநூல்
Published on

பீகாரில் நேருவால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட பழங்குடியினப்பெண், தான் வாழ்ந்த ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட அவலம் அரங்கேறிய நிலையில் தற்போது அவரின் மறைவு சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி பீகார் மாநிலம் ஜார்க்கண்டில் (அப்போது மாநிலம் பிரிக்கப்படவில்லை) அமைந்துள்ள பஞ்செட் என்னும் அணையை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், ’கட்டுமானப்பணியில் ஈடுபட்ட ஒருவரால் அணை திறக்கப்படுவது நலம்’ என்று எண்ணிய அவர், தன்னை வரவேற்பதற்காக அங்கு வந்தவர்களில் 16 வயதான புத்னி மஞ்சியான் என்னும் பழங்குடியினப் பெண்னை அழைத்து அணையை திறந்து வைத்தார். அப்போது அவரை கௌரவம் செய்யும் விதமாக நேரு அப்பெண்ணிற்கு மாலை அணிவித்தார்.

புத்னி மஞ்சியான்
புத்னி மஞ்சியான் முகநூல்

இதனை அறிந்த அவ்வூர் சந்தாலி சமூகத்தினர், நேரு அப்பெண்ணுக்கு மாலை அணிவித்தது அவர்களின் வழக்கப்படி திருமணம் செய்து கொள்வதற்கு சமம் என்று கூறி, 16 வயது அப்பெண்னை ஊரில் இருந்து விலக்கி வைத்தனர்.

பல காலம் ஒதுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்த பத்னி சிறிது காலத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் சால்டோராவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு கூலி வேலை செய்த இவருக்கு சுதிர் தத்தா என்பவர் அடைக்கலம் கொடுக்கவே அவரையே இறுதியில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தனர்.

1985 ஆம் ஆண்டு இதனை அறிந்த ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்திற்கு சென்று எந்த அணையை திறந்து வைத்து அப்பெண் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டாரோ அதே பஞ்செட் அணையின் தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் இவருக்கு வேலை வழங்கினார்.

பழங்குடியினப் பெண்
உ.பி.: “பாலியல் வழக்கைத் திரும்பப் பெறு” - மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

இதன் பிறகு தன் வாழ்நாளை தொடர்ந்த புத்னி 2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று தனது மகள் ரத்னாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தன் 80 ஆவது வயதில் கடந்த நவம்பர் 17 ஆம்தேதி இயற்கை எய்தினார். மாலையிட்டதால் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட இச்சம்பவம் கேட்பதற்கு மிகுந்த ஆதிர்ச்சியையும் அதேசமயம் இவரின் மறைவு ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேருவின் நினைவிடத்திற்கு அருகே புத்னிக்கும் ஒரு நினைவிடம் வேண்டும் என்றும் அவரது மகள் ரத்னாவுக்கு ஓய்வூதியத்தினையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com